ADDED : அக் 02, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாவ் பாலோ: பிரக்ஞானந்தா, ஆரோனியன் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
பிரேசிலில், 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' தொடர் நடக்கிறது. இதன் 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் விளையாடுகின்றனர். முதல் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 46வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.
பைனலில், அமெரிக்காவின் பேபியானோ காருணா, பிரான்சின் மேக்சிம் வச்சியர் லாக்ரேவ் விளையாடுகின்றனர். இதன் முதல் போட்டி 89வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.