/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
விதித்தை வென்றார் அர்ஜுன் * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்
/
விதித்தை வென்றார் அர்ஜுன் * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்
விதித்தை வென்றார் அர்ஜுன் * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்
விதித்தை வென்றார் அர்ஜுன் * சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில்
ADDED : நவ 05, 2024 11:43 PM

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன், சக வீரர் விதித் குஜ்ராத்தியை வீழ்த்தினார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது. இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 8 பேர், இதில் பங்கேற்கின்றனர்.
நேற்று, முதல் சுற்று நடந்தது. அர்ஜுன்-விதித் மோதினர். துவக்கத்தில் இருவரும் சமபலத்தில் விளையாடினர். 54 வது நகர்த்தலில் விதித் ஆதிக்கம் செலுத்தினார். இதில் இருந்து சாமர்த்தியமாக மீண்டு வந்த அர்ஜுன், 96 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பிரான்சின் வாசியர், ஈராவின் பர்ஹாமை வீழ்த்தினார். ஆரோனியன்-சரனா, அரவிந்த் சிதம்பரம்-அமின் மோதிய போட்டி 'டிரா' ஆகின.
வைஷாலி ஏமாற்றம்
சாலஞ்சர் பிரிவில் வைஷாலி, ஹரிகா என 2 வீராங்கனை, பிரனவ், பிரனேஷ் உட்பட 6 வீரர்கள் என மொத்தம் 8 இந்திய நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கின்றனர். நேற்று முதல் சுற்று நடந்தன. வைஷாலி, சக வீரர் லியான் மென்டன்காவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் பிரனவ், சக வீராங்கனை ஹரிகாவை வென்றார். பிரனேஷ், அபிமன்யுவை சாய்த்தார். கார்த்திகேயன் முரளி, ரவுனக்கை வீழ்த்தினார்.