sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பிரனேஷ், அதிபன் அபாரம் * சென்னை செஸ் தொடரில்...

/

பிரனேஷ், அதிபன் அபாரம் * சென்னை செஸ் தொடரில்...

பிரனேஷ், அதிபன் அபாரம் * சென்னை செஸ் தொடரில்...

பிரனேஷ், அதிபன் அபாரம் * சென்னை செஸ் தொடரில்...


ADDED : ஆக 12, 2025 11:05 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. சாலஞ்சர்ஸ் பிரிவு 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று ஆறாவது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் ஹரிகா-வைஷாலி மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 80வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் அபிமன்யு புரானிக், பிரனேஷை சந்தித்தார். தொடர்ச்சியாக 4 வெற்றி பெற்ற அபிமன்யு, இம்முறை 46வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். அதிபன் பாஸ்கரன், திப்தயனை வென்றார். 4.5 புள்ளியுடன் பிரனேஷ் முதலிடத்துக்கு முன்னேறினார். அபிமன்யு (4.5 புள்ளி, 4 வெற்றி, 1 தோல்வி, 1 'டிரா') அடுத்து உள்ளார்.

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், ஜெர்மனியின் வின்சென்ட்டை எதிர்கொண்டார். கடந்த இரு சுற்றில் சிறப்பாக செயல்படாத அர்ஜுன், நேற்றைய போட்டியையும் 'டிரா' செய்தார். நெதர்லாந்தின் வான் பாரீஸ்ட், நிஹால் சரினை வீழ்த்தினார்.

இந்தியாவின் பிரனவ், அமெரிக்காவின் அவாண்டரிம் தோல்வியடைந்தார். 6 சுற்று முடிவில் வின்சென்ட் (4.5), அர்ஜுன் (3.5), அவாண்டர் (3.5), நெதர்லாந்தின் அனிஷ் கிரி (3.0) முதல் 4 இடத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us