ADDED : பிப் 14, 2025 10:24 PM

ஹம்பர்க்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் குகேஷ், 8வது இடம் பிடித்தார்.
ஜெர்மனியில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடந்தது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், ஐந்து முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன் காலிறுதியில் தோற்ற குகேஷ், அடுத்து 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான போட்டியில் ஏமாற்றினார்.
இதையடுத்து 7-8வது இடத்துக்கான போட்டியில் ஈரானின் அலிரேசாவை எதிர்கொண்டார். முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், துவக்கத்தில் இருந்து மோசமாக செயல்பட்டார். வேறு வழியில்லாத நிலையில் 30 வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியடைய, 8வது இடம் பெற்றார். இவருக்கு ரூ. 17.32 லட்சம் கிடைத்தது.
பைனலில் ஜெர்மனியின் வின்சென்ட், 1.5-0.5 என அமெரிக்காவின் காருணாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். ரூ. 1.73 கோடி பரிசு பெற்றார்.