sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வைஷாலி அபாரம்

/

வைஷாலி அபாரம்

வைஷாலி அபாரம்

வைஷாலி அபாரம்


ADDED : அக் 11, 2024 10:42 PM

Google News

ADDED : அக் 11, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும். நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், ஆனந்த் தலைமையிலான காங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இதில் ஐந்து முறை உலக சாம்பியன் இந்தியாவின் ஆனந்த், மும்பை சார்பில் களமிறங்கிய மேக்சிம் வாசியர் (பிரான்ஸ்) மோதிய போட்டி டிரா ஆனது. மற்றொரு போட்டியில் காங்கஸ் வீராங்கனை வைஷாலி, மும்பை அணியின் கோனேரு ஹம்பி மோதினர். இப்போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. இவர் 65 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

முடிவில் காங்கஸ் அணி 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த போட்டி முடிவில் அலாஸ்கன் நைட்ஸ் அணி (21 புள்ளி), ஆல்பைன் (18 புள்ளி) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.






      Dinamalar
      Follow us