ADDED : அக் 10, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணிகள் மோதின. மும்பை வீரர் விதித் குஜ்ராத்தி, கேம்பிட்ஸ் அணியின் ஜானை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய விதித் குஜ்ராத்தி, போட்டியின் 66 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மும்பையின் ரவுனக், ஜோனாசை வீழ்த்தினார்.
மும்பை வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி என இருவரும் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். முடிவில் மும்பை அணி 6-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில் திரிவேணி அணி 12-9 என்ற கணக்கில் காங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை நடந்த போட்டி முடிவில் அலாஸ்கன் நைட்ஸ் அணி (18 புள்ளி), திரிவேணி (12) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.