/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புதிய 'கிராண்ட்மாஸ்டர்' ஹரிகிருஷ்ணன்
/
புதிய 'கிராண்ட்மாஸ்டர்' ஹரிகிருஷ்ணன்
ADDED : ஜூலை 12, 2025 10:45 PM

புதுடில்லி: இந்தியா செஸ் வீரர் ஹரிகிருஷ்ணன் 23. சென்னையை சேர்ந்த இவர், 7 ஆண்டுக்கு முன் சர்வதேச மாஸ்டர் (ஐ.எம்.) ஆனார். 2023ல் சுவிட்சர்லாந்தில் நடந்த தொடரில் பங்கேற்ற ஹரிகிருஷ்ணன், கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார்.
தவிர 2024, ஜூன் மாதம் வெளியான 'பிடே' தரவரிசையில் 2500 புள்ளி பெற்றார். கடந்த மாதம் ஸ்பெயினில் நடந்த தொடரில் பங்கேற்ற இவர், இரண்டாவது அந்தஸ்தை எட்டினார். தற்போது பிரான்ஸ் தொடரில் பங்கேற்றார். மூன்றாவது அந்தஸ்து பெற, கடைசி 3 சுற்றில் குறைந்தது 1.5 புள்ளி எடுக்க வேண்டிய நிலை இருந்தது.
7வது சுற்றில் உக்ரைனின் யூரி, 8வது சுற்றில் பிரான்சின் ஜூலஸ், 9 வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன் என தொடர்ந்து 3 போட்டியில் 'டிரா' செய்ய 1.5 புள்ளி கிடைத்தது. ஒட்டுமொத்தம் 7/9 புள்ளியுடன், தொடரில் 4வது இடம் பெற்றார். தவிர, இந்தியாவின் 87வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஹரிகிருஷ்ணன்.