
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனே: சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.
நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடந்தன. இந்திய வீராங்கனைகள் திவ்யா, வைஷாலி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 17வது நகர்த்தலில் வைஷாலி தவறு செய்தார். இதில் இருந்து மீண்டு வர முடியாத நிலையில், போட்டியின் 26 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஹரிகா, போலந்தின் அலினா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. சீனாவின் ஜு ஜினெர், மங்கோலியாவின் பக்துயாக்கை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் திவ்யா (2.0), ஜு ஜினெர் (2.0), ரஷ்யாவின் போலினா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹம்பி (1.0), 5வது, ஹரிகா (0.5), 10 வது இடத்தில் உள்ளனர்.