ADDED : ஆக 12, 2026 10:56 PM

செயின்ட் லுாயிஸ்: கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் வைஷாலி 'டிரா' செய்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் பெண்களுக்கான கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மொத்த பரிசுத் தொகை ரூ. 2.39 கோடி.உலக கோப்பை சாம்பியன், இந்தியாவின் திவ்யா, கோனேரு ஹம்பி, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.
வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசாராவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 38 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். திவ்யா, அமெரிக்காவின் 17 வயது வீராங்கனை அலைஸ் லீயிடம், 57 நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஹம்பி, சீனாவின் ஜோங்யிடம் வீழ்ந்தார்.
இரண்டு சுற்று முடிவில் ஜோங்யி (2.0), அலைஸ் (2.0), உக்ரைனின் முஜிசக் (1.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். திவ்யா (1.0) 6, ஹம்பி (0.5) 8, வைஷாலி (0.5) 9வது இடத்தில் உள்ளனர்.
