ADDED : டிச 01, 2025 11:23 PM

லண்டன்: லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா 20, பிரனவ் ஆனந்த் 19, உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.
இதன் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் ரொஜெனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் பிரனவ் ஆனந்த், செர்பியாவின் வெலிமிர் இவிச்சை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரனவ், 43 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் கிருஷ்ணன் ரித்விக், சக வீரர் பகத் குஷ்சை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் சந்தோஷ், பத்ரிநாத் தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.0 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் வெலிமிர் இவிச் (5.0) உள்ளார். முதலிடத்தில் இருந்த பிரனவ் (4.5), 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

