ADDED : செப் 19, 2026 10:58 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்றன.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 5 வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் களமிறங்கினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 42 நகர்த்தலில் ஷிரோவை வென்றார்.
மற்றொரு போட்டியில் அர்ஜுன் (வெள்ளை), 36வது நகர்த்தலில் நக்சிமை வீழ்த்தினார். இத்தொடரில் முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற நிஹால் சரின், நேற்று முதன் முறையாக 'டிரா' செய்தார். பிரக்ஞானந்தா, நிஹால் சரின் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில், தொடர்ந்து 4வது வெற்றி பெற்றது.
திவ்யா அபாரம்
பெண்கள் பிரிவில் இந்தியா, 4வது சுற்றில் மங்கோலியாவை சந்தித்தது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணியில் ஹம்பி, வைஷாலி, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய, உலக கோப்பை சாம்பியன் திவ்யா, 47 நகர்த்தலில் பயாஸ்கலை வென்றார்.
மற்றொரு போட்டியில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய சவிதா ஸ்ரீ, முன்கன்டூலை, 50 வது நகர்த்தலில் வீழ்த்தினார். வைஷாலி, டர்மங்க் மோதிய போட்டி 75வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 'சீனியர்' ஹம்பி, முன்கன்ஜுல் மோதிய போட்டி 82 நகர்த்தலுக்குப் பின் நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் இந்திய பெண்கள் அணி, 3.0-1.0 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 4வது வெற்றி பெற்றது.
