தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'டெக்பால்': இந்திய வீராங்கனை ஏமாற்றம்

'டெக்பால்': இந்திய வீராங்கனை ஏமாற்றம்

'டெக்பால்': இந்திய வீராங்கனை ஏமாற்றம்


ADDED : செப் 19, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு 'டெக்பால்' போட்டிக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் குவிம்சி டிசவுசா, இந்தோனேஷியாவின் சுமாயா மோதினர். இதில் ஏமாற்றிய குவிம்சி டிசவுசா 1-2 (12-7, 9-12, 7-12) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் (செப். 20) குவிம்சி டிசவுசா, ஜப்பானின் யுய்னா சகமோட்டோவை சந்திக்கிறார்.

ஹேண்ட்பால்: தென் கொரியா கலக்கல்

பெண்கள் ஹேண்ட்பால் லீக் போட்டியில் தென் கொரியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 48-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் அணி 24-34 என, சீனாவிடம் தோல்வியடைந்தது. ஜப்பான் அணி 40-14 என, வியட்நாம் அணியை தோற்கடித்தது.

ஆண்களுக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் குவைத் அணி 26-24 என, ஈரான் அணியை வென்றது.

கூடைப்பந்து: சீனா வெற்றி

பெண்கள் கூடைப்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தாய்லாந்து, சீனா அணிகள் மோதின. இதில் சீன அணி 111-46 (33-14, 24-14, 24-10, 30-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தோனேஷியாவிடம் வீழ்ந்த தாய்லாந்து அணி, தொடர்ந்து 2வது தோல்வியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us