ADDED : செப் 21, 2026 11:10 PM

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய பெண்கள் அணி, அமெரிக்காவை வீழ்த்தியது.
உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. பெண்கள் பிரிவில் இந்தியா, 6வது சுற்றில் அமெரிக்காவை எதிர்கொண்டது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சவிதா ஸ்ரீ, 47 நகர்த்தலில் ரோஸ் அத்வலை வீழ்த்தினார். வந்திகா, இரினாவை வென்றார். உலக கோப்பை சாம்பியன் திவ்யா, அனுபவ ஹம்பி தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
முடிவில் இந்திய அணி 3.0-1.0 என வெற்றி பெற்றது.
ஆண்கள் ஏமாற்றம்
ஓபன் பிரிவு 6 வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, வலிமையான உஸ்பெகிஸ்தானை சந்தித்தது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் களமிறங்கினர். இதில் குகேஷ்-ஷம்சுதின், பிரக்ஞானந்தா-நாடிர்பெக் அப்துசட்டோரோவ், அர்ஜுன்-சிந்தரோவ் மோதிய மூன்று போட்டிகளும் 'டிரா' ஆனது. நிஹால் சரின், 54 நகர்த்தலில் யாக்குபோயவிடம் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 1.5-2.5 என இத்தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது.
