/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 5வது வெற்றி
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 5வது வெற்றி
ADDED : செப் 16, 2024 10:58 PM

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு ஐந்தாவது சுற்றில் இந்திய அணி, அஜர்பெய்ஜானை சந்தித்தது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் களமிறங்கினர். குகேஷ், அய்டின் சுலேமானை சந்தித்தார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன், ராப் மமதோவை வென்றார். பிரக்ஞானந்தா, விதித் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
பெண்கள் அபாரம்
இந்திய பெண்கள் அணி ஐந்தாவது சுற்றில் கஜகஸ்தானுடன் மோதியது. இந்தியாவின் வந்திதா வெற்றி பெற, திவ்யா தனது போட்டியை 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா தோல்வியடைய, ஸ்கோர் 1.5-1.5 என சமன் ஆனது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வைஷாலி, கஜகஸ்தானின் பிபிசாராவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 2.5-1.5 என இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.