
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செயின்ட் லுாயிஸ்: அமெரிக்காவில் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஐந்தாவது சுற்று நேற்று நடந்தத. இந்தியாவின் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், தவறான நகர்த்தல்களால் பின் தங்கினார். 27 வது நகர்த்தலில் டுடா செய்த தவறை சரியாக பயன்படுத்தினார் குகேஷ். தோல்வியில் இருந்து மீண்ட இவர், 45வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்சிம் வாசியரை சந்தித்தார். இப்போட்டி 26வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஐந்து சுற்று முடிவில் அமெரிக்காவின் பேபியானோ (3.5), ஆரோனியன் (3.0), பிரக்ஞானந்தா (3.0) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். குகேஷ் (2.5) 8வது இடத்தில் நீடிக்கிறார்.

