ADDED : ஆக 27, 2025 09:27 PM

செயின்ட் லுாயிஸ்: அமெரிக்காவில் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் எட்டாவது சுற்று நேற்று நடந்தன. இந்தியாவின் பிரக்ஞானந்தா,
அமெரிக்காவின் சோ வெஸ்லேயுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து சம நிலையில் இருந்தார். முடிவில் போட்டியின் 44 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், நீண்ட போராட்டத்துக்குப் பின் 77 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். உஸ்பெகிஸ்தானின் நாடிர் பெக், பிரான்சின் அலிரேசாவை வீழ்த்தினார்.
எட்டு சுற்று முடிவில் அமெரிக்காவின் பேபியானோ (5.0 புள்ளி), பிரக்ஞானந்தா (5.0) 'டாப்-2' இடத்தில் உள்ளனர். அமெரிக்காவின் சோ வெஸ்லே (4.5), ஆரோனியன் (4.5) 3, 4வது இடங்களில் உள்ளனர். இன்னும் ஒரு சுற்று மட்டும் மீதமுள்ள நிலையில், குகேஷ் (3.5), அலிரேசா (3.0), நாடிர்பெக் (2.5) கடைசி 3 இடத்தை உறுதி செய்தனர்.

