/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆனந்த் இரண்டு வெற்றி * கோல்கட்டா செஸ் தொடரில்
/
ஆனந்த் இரண்டு வெற்றி * கோல்கட்டா செஸ் தொடரில்
ADDED : ஜன 07, 2026 11:06 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் சர்வதேச 'ரெபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் கார்ல்சன் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.
முதலில் 'ரேபிட்' முறையிலான போட்டி நடக்கின்றன. நேற்று 3 சுற்று நடந்தன. ஆனந்த், அமெரிக்காவின் சோ வெஸ்லேவை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 40 நகர்த்தலில் வெற்றி பெற்றார். 3வது போட்டியில் ஆனந்த், சக வீரர் கார்த்தி சிதம்பரத்தை வென்றார்.
முதல் 3 சுற்று முடிவில் ஆனந்த் (2.5), அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் (2.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். விதித் குஜ்ராத்தி 4 (2.0), நிஹால் சரில் 5 (1.5), பிரக்ஞானந்தா 6 வது (1.5) இடத்தில் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் வந்திகா 4 (2.0), ரக்சித்தா தேவி 6 (1.5), ஹரிகா 7 வது (1.0) இடங்களில் உள்ளனர். உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, 3 போட்டியில் 2 'டிரா', 1 தோல்வியுடன் 9வது (1.0) இடத்தில் உள்ளார். வைஷாலி (0.5) கடைசி இடத்தில் (10) உள்ளார்.

