/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அர்ஜுன், ஹரிகிருஷ்ணா அபாரம் * உலக கோப்பை செஸ் தொடரில்...
/
அர்ஜுன், ஹரிகிருஷ்ணா அபாரம் * உலக கோப்பை செஸ் தொடரில்...
அர்ஜுன், ஹரிகிருஷ்ணா அபாரம் * உலக கோப்பை செஸ் தொடரில்...
அர்ஜுன், ஹரிகிருஷ்ணா அபாரம் * உலக கோப்பை செஸ் தொடரில்...
ADDED : நவ 13, 2025 10:51 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றுக்கு அர்ஜுன், ஹரிகிருஷ்ணா முன்னேறினர்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, 3 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்றனர். நேற்று 'டைபிரேக்கர்' போட்டி நடந்தன.
அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதிய முதல் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும், 57 வது நகர்த்தலில் அர்ஜுன் வென்றார். முடிவில் 3.0-1.0 என வெற்றி பெற்று, ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, சுவீடனின் கிரான்டெலியஸ் இடையிலான முதல் 'டை பிரேக்கர்' போட்டி 'டிரா ஆனது. அடுத்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகிருஷ்ணா, 34 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் ஹரிகிருஷ்ணா, 2.5-1.5 என்ற கணக்கில் வென்று, ஐந்தாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
பிரக்ஞானந்தா 'ஷாக்'
கடந்த உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாடிய இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனில் டுபோ மோதிய 'டை பிரேக்கர்' முதல் போட்டி, 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 30 வது நகர்த்தலில் செய்த தவறு காரணமாக, அடுத்தடுத்து ஏமாற்றினார். வேறு வழியில்லாத நிலையில் 53 வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்து (1.5-2.5) வெளியேறினார்.

