/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரதமர் மோடி-குகேஷ் சந்திப்பு
/
பிரதமர் மோடி-குகேஷ் சந்திப்பு
ADDED : டிச 28, 2024 11:01 PM

புதுடில்லி: சிங்கப்பூரில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரெனை 32, வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் குகேஷ்.
நேற்று பிரதமர் மோடி, குகேஷ், அவரது பெற்றோர்களை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
கடந்த சில ஆண்டுகளாக குகேஷை பார்த்து வருகிறேன். அவரது அர்ப்பணிப்பு உணர்வு, உறுதி எனக்கு மிகவும் பிடிக்கும். பணிவு, அமைதியின் உருவமாக திகழ்கிறார்.
இவர், தன்னம்பிக்கையுடன் செயல்படுவது ஊக்கம் தருவதாக அமைகிறது. 'இளம் வயதில் உலக சாம்பியன் ஆவேன்,' என குகேஷ் பேசிய வீடியோ பார்த்தது நினைவுக்கு வந்தது. தற்போது தனது சொந்த முயற்சியால் அவரது கணிப்பு உண்மையாகிவிட்டது.
ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரத்தின் வெற்றியிலும், அவரது பெற்றோர் முக்கிய பங்கு வகிப்பர். குகேஷிற்கு ஆதரவாக இருந்த, அவரது பெற்றோர்களை பாராட்டினேன்.
விளையாட்டினை தேர்வு செய்யும் இளம் வீரர், வீராங்கனைகளின் பெற்றோர்களுக்கு, இது துாண்டுகோலாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நினைவுப்பரிசு
பிரதமர் மோடி கூறுகையில்,'' உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற போது விளையாடிய செஸ் போர்டை, குகேஷிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். குகேஷ், டிங் லிரென் கையெழுத்திட்ட இது, சிறந்த நினைவுப்பரிசு,'' என்றார்.

