/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அர்ஜுன் 'டிரா' * செஸ் உலக கோப்பை காலிறுதியில்...
/
அர்ஜுன் 'டிரா' * செஸ் உலக கோப்பை காலிறுதியில்...
ADDED : நவ 17, 2025 11:13 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடர் காலிறுதியின் முதல் போட்டியை இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 'டிரா' செய்தார்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்ட பலர் தோல்வியடைந்து வெளியேறினர்.
இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதுகின்றனர். இதன் முதல் போட்டி நேற்று நடந்தது. அர்ஜுன், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தை வெளிப்படுத்த, 31 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
ரஷ்யாவின் ஆன்ட்ரே, அமெரிக்காவின் ஷாக்லாந்து மோதிய காலிறுதியின் மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. காலிறுதியின் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.

