ADDED : நவ 18, 2025 10:51 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரில் அர்ஜுன் பங்கேற்ற காலிறுதியின் இரண்டாவது போட்டி 'டிரா' ஆனது.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.
இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி மட்டும் காலிறுதியில் பங்கேற்கிறார். இதில் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதுகின்றனர். இருவரும் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது.
நேற்று இரண்டாவது போட்டியில் அர்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 32 நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.
ரஷ்யாவின் ஆன்ட்ரே-அமெரிக்காவின் ஷாக்லாந்து, உஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ்-மெக்சிகோவின் மார்டினஸ் இடையிலான காலிறுதியின் இரண்டாவது போட்டிகள் 'டிரா' ஆகின. இன்று வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

