/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி
/
ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி
ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி
ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு: 2030ல் நடத்த அனுமதி
ADDED : நவ 26, 2025 10:58 PM

கிளாஸ்கோ: ஆமதாபாத்தில், வரும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்படுகிறது. கடைசியாக, 2022ல் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது. இதன் 23வது சீசன், அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளது.வரும் 2030ல், 24வது காமன்வெல்த் விளையாட்டை நடத்திட இந்தியா (ஆமதாபாத்), நைஜீரியா (அபுஜா) நாடுகள் விருப்பம் தெரிவித்தன.
நேற்று, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், போட்டியை இந்தியாவில் நடத்த முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. தவிர, வரும் 2034ல் இப்போட்டியை நடத்தும் உரிமம் ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு நடத்தும் 2வது இந்திய நகரமானது ஆமதாபாத். ஏற்கனவே 2010ல் டில்லியில் நடந்தது. இதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி செலவானது.

