/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றது இந்தியா: உலக யூத் டேபிள் டென்னிசில்
/
வெள்ளி வென்றது இந்தியா: உலக யூத் டேபிள் டென்னிசில்
வெள்ளி வென்றது இந்தியா: உலக யூத் டேபிள் டென்னிசில்
வெள்ளி வென்றது இந்தியா: உலக யூத் டேபிள் டென்னிசில்
ADDED : நவ 26, 2025 10:57 PM

கிளஜ் நபோகா: உலக யூத் டேபிள் டென்னிஸ் தொடரில் இளம் இந்திய அணி வெள்ளி வென்றது. பைனலில் 0-3 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில், உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, ஜப்பான் மோதின. இந்தியா சார்பில் பங்கேற்ற அன்குர் பட்டாச்சார்ஜீ, அபிநந்த், பிரியானுஜ் ஏமாற்றினர். முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான அணிகள் பிரிவில் அங்கோலிகா, தின்யான்ஷி, அனன்யா இடம் பெற்ற இந்தியா வெண்கலம் வென்றிருந்தது.