sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : நவ 24, 2025 11:30 PM

Google News

ADDED : நவ 24, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரொனால்டோ 'பைசைக்கிள் கிக்'

ரியாத்: சவுதி அரேபியாவில், சவுதி புரோ லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் அல்-நாசர், அல்-கலீஜ் அணிகள் மோதின. இதில் அல்-நாசர் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அல்-நாசர் அணியின் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, 'பைசைக்கிள் கிக்' மூலம் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

மெஸ்ஸி 'மேஜிக்'

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கால்பந்து தொடருக்கான 'ஈஸ்டர்ன் கான்பரன்ஸ்' அரையிறுதியில் இன்டர் மயாமி, சின்சினாட்டி எப்.சி., அணிகள் மோதின. அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 38, கைகொடுக்க (ஒரு கோல், 3 'அசிஸ்ட்') இன்டர் மயாமி அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பைனலில் (நவ. 29) இன்டர் மயாமி, நியூயார்க் சிட்டி எப்.சி., அணிகள் விளையாடுகின்றன.

அர்ஜென்டினா அசத்தல்

பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான 'புட்சல்' கால்பந்து உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. இதன் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது. முதல் போட்டியில் மொராக்கோ அணியை வீழ்த்திய அர்ஜென்டினா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

எக்ஸ்டிராஸ்

* தேனியில் நடக்கும் 'கூச் பெஹார்' டிராபி (19 வயது) லீக் போட்டியில் தமிழகம், பீஹார் அணிகள் விளையாடுகின்றன. பீஹார் அணி முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 3/0 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டம் கனமழையால் ரத்தானது.

* லக்னோவில், சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி கடைசி நேரத்தில் விலகினார்.

* பெங்களூருவில் நடக்கவுள்ள 'வேர்ல்டு டென்னிஸ் லீக்' தொடரில் (டிச. 17-20) இந்தியாவின் ரோகன் போபண்ணா, ரஷ்யாவின் டேனியல் மெத்வெதேவ், 'பால்கன்ஸ்' அணிக்காக விளையாடுகின்றனர். 'ஈகிள்ஸ்' அணியில் சுமித் நாகல் (இந்தியா), மோன்பில்ஸ் (பிரான்ஸ்) இடம் பெற்றுள்ளனர்.

* கோவாவில், அடுத்த ஆண்டு (ஜன. 26 - பிப். 4) 'லெஜண்ட்ஸ் புரோ 'டி-20' லீக்' முதல் சீசன் நடக்கவுள்ளது. இதில் ஓய்வு பெற்ற முன்னணி வீரர்களான இந்தியாவின் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், ஸ்டைன் (தெ.ஆப்.,), வாட்சன் (ஆஸி.,) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் கமிஷனராக, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us