sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஹாக்கி: நியூசிலாந்து முதல் வெற்றி

/

ஹாக்கி: நியூசிலாந்து முதல் வெற்றி

ஹாக்கி: நியூசிலாந்து முதல் வெற்றி

ஹாக்கி: நியூசிலாந்து முதல் வெற்றி


ADDED : நவ 24, 2025 11:26 PM

Google News

ADDED : நவ 24, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 3-1 என, தென் கொரியாவை வீழ்த்தியது.

மலேசியாவின் இபோ நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சாம் லேன் (49வது நிமிடம்), நிக்கோலஸ் லிட்ஸ்டோன் (51வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மலேசியாவுக்கு எதிராக 'டிரா' செய்த நியூசிலாந்து, 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா' என, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மற்றொரு லீக் போட்டியில் மலேசியா, கனடா அணிகள் மோதின. இதில் மலேசிய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது (நவ. 25).






      Dinamalar
      Follow us