sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : நவ 21, 2025 10:49 PM

Google News

ADDED : நவ 21, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அர்ஜென்டினா அதிர்ச்சி

போலோக்னா: இத்தாலியில், டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய அர்ஜென்டினா 1-2 என தோல்வியடைந்தது. ஜெர்மனி சார்பில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பங்கேற்றார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என செக்குடியரசை வீழ்த்தியது. அரையிறுதியில் ஸ்பெயின்-ஜெர்மனி, இத்தாலி-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

பார்சிலோனா 'டிரா'

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் பார்சிலோனா (ஸ்பெயின்), செல்சி (இங்கிலாந்து) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணி 3-1 என, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை வீழ்த்தியது.

பைனலில் பிரேசில்

அசன்சியன்: பராகுவேயில், பெண்களுக்கான தெற்கு, மத்திய அமெரிக்க யூத் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் அரையிறுதியில் பிரேசில் அணி 29-27 என்ற கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 32-25 என உருகுவே அணியை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில், வரும் நவ. 27ல் பிரிமியர் லீக் ('டி-20') தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நடக்கிறது. இந்தியாவின் தீப்தி சர்மா, ரேணுகா சிங், சோபி டெவின் (நியூசி.,), சோபி எக்லெஸ்டோன் (இங்கி.,), அலிசா ஹீலி, மேக் லானிங் (ஆஸி.,) உள்ளிட்ட 277 பேர் ஏலத்தில் வரவுள்ளனர்.

* ஆசிய கோப்பை (17 வயது) கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் 23 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அபிஷேக் குமார், அங்கூர் ராஜ்பாக், சுபம் பூனியா, டென்னி சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

* ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கும் ஸ்னுாக்கர் உலக கோப்பை லீக் போட்டியில் பங்கஜ் அத்வானி, பிரிஜேஷ், ஆதித்யா மேத்தா அடங்கிய இந்தியா 'ஏ' அணி 3-0 என ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us