'மின்னல்' வேக வீரர் எஸீம் * 100 மீ., ஓட்டத்தில் தங்கம்
'மின்னல்' வேக வீரர் எஸீம் * 100 மீ., ஓட்டத்தில் தங்கம்
ADDED : ஜூலை 29, 2026 11:02 PM

கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் 100 மீ., ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்த இமானுவேல் எஸீம் 32, தங்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் பைனல் நடந்தது. 8 வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டி துவங்கிய சில வினாடிகளில் ஒருவருக்கு ஒருவர், கடும் சவால் கொடுத்து மின்னலாக பாய்ந்தனர். சில வினாடி வித்தியாசத்தில் 4 வீரர்கள் 'பினிஷிங் லைனை' எட்டினர்.
முடிவில் காமரூன் வீரர் இமானுவேல் எஸீம், 9.83 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். காமன்வெல்த், தேசிய சாதனை படைத்து அசத்தினார்.
0.02 வினாடி பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் லச்லன் கென்னடி (9.85) வெள்ளி கைப்பற்றினார். நைஜீரியாவின் அஜாயிக்கு (9.90) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
ஜோ அபாரம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனல் நடந்தது. நியூசிலாந்தின் 28 வயது வீராங்கனை, ஜோ ஹாப்ஸ், 10.93 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். இங்கிலாந்தின் அமி ஹன்ட் (10.98), 0.01 வினாடி பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் டோரி லீவிஸ் (10.99) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
