தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: பைனலில் பிரீத்தி, ஜாஸ்மின்

குத்துச்சண்டை: பைனலில் பிரீத்தி, ஜாஸ்மின்

குத்துச்சண்டை: பைனலில் பிரீத்தி, ஜாஸ்மின்


ADDED : ஜூலை 31, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு குத்துச்சண்டை பைனலுக்கு, இந்தியாவின் பிரீத்தி, ஜாஸ்மின் உள்ளிட்டோர் முன்னேறினர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. குத்துச்சண்டையில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 54 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, ஜாம்பியாவின் கேத்தரினை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி, 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

* 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின், லெசோத்தோவின் ரபெலாங்கை சந்திக்க இருந்தார். கடைசி நேரத்தில் ரபெலாங் விலகியதால், ஜாஸ்மின் பைனலுக்குள் நுழைந்தார்.

* 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அருந்ததி, 4-0 என வேல்சின் ரோசியை சாய்த்தார்.

* ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்குஷ், கனடாவின் ஜோஷூவா 5-0 என சாய்த்து பைனலுக்கு முன்னேறினார்.

* 55 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜடுமானி சிங், நமீபியாவின் பிலிப்பை 5-0 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.

தடகளத்தில் கலக்கல்

நேற்று கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் விஷால், அன்சா, ராஜேஷ், ராஷ்தீப் கவுர் அடங்கிய அணி பங்கேற்றது. 3 நிமிடம், 20.98 வினாடி நேரத்தில் வந்து நான்காவது இடம் பிடித்தது. ஒட்டு மெத்தமாக 7வது இடம் பிடித்த இந்திய அணி, பைனலுக்கு முன்னேறியது.

தேஜஸ்வின் ஷங்கர் 'ஷாக்'

ஆண்களுக்கான 10 போட்டிகள் கொண்ட 'டெகாத்லான்' நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற தேஜஸ்வின் சங்கர் பதக்கம் வெல்வார் என நம்பப்பட்டது. இதுவரை முடிந்த நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், போல் வால்ட், 100, 400 மீ., ஓட்டம், 110 மீ., தடை ஓட்டம் என 8 போட்டிகள் முடிவில் மொத்தம் 6637 புள்ளிகள் பெற்று, நான்காவது இடத்தில் உள்ளார்.

மீதமுள்ள ஈட்டி எறிதல், 1500 மீ., ஓட்டத்தில் சிறப்பாக செயல்பட்டால் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. முதல் மூன்று இடத்தில் கிரனடாவின் லிண்டன் விக்டர் (6,704), கனடாவின் டேமியன் வார்னர் (6.669), இங்கிலாந்தின் சாம்மி பால் (6,650) உள்ளனர்.

பாருல் சவுத்ரி ஏமாற்றம்

பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் பாருல் சவுத்ரி பங்கேற்றார். இதில் 15 நிமிடம் 08.56 வினாடி நேரத்தில் வந்த பாருல் சவுத்ரி, 13வது இடம் பிடித்து ஏமாற்றம் தந்தார். ஏற்கனவே 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் 5வது இடம் பெற்றிருந்தார்.

அனிமேஷ் '17'

ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுர், தகுதிச்சுற்றில் (20.46 வினாடி) 7வது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் அரையிறுதி-2ல் களமிறங்கினார். 20.65 வினாடி நேரத்தில் வந்து 6வது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக அனிமேஷ் 17 வது இடம் பிடிக்க, பைனல் வாய்ப்பை இழந்தார்.

தஜிந்தர் 'நம்பர்-5'

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி பைனல் நடந்தது. இந்தியா சார்பில் தஜிந்தர்பால் சிங், சமர்தீப் கில் பங்கேற்றனர். இதில் 20.27 மீ., துாரம் எறிந்து 5வது இடம் பெற்றார். சமர்தீப் சிங் (20.03) 7வது இடம் பிடித்தார். நைஜீரியாவின் சுக்வேபுகா (21.07), நியூசிலாந்தின் டாம் வால்ஸ் (21.03), இங்கிலாந்தின் ஸ்காட் லின்கான் (20.99) முதல் மூன்று இடம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us