தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெள்ளி வென்றார் லவ்பிரீத் சிங் * வட்டு எறிதலில் சீமா 'வெண்கலம்'

வெள்ளி வென்றார் லவ்பிரீத் சிங் * வட்டு எறிதலில் சீமா 'வெண்கலம்'

வெள்ளி வென்றார் லவ்பிரீத் சிங் * வட்டு எறிதலில் சீமா 'வெண்கலம்'


ADDED : ஜூலை 31, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங், வெள்ளிப் பதக்கம் வென்றார். வட்டு எறிதலில் சீமாவுக்கு வெண்கலம் கிடைத்தது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான +110 கிலோ பிரிவு பளுதுாக்குதல் நடந்தது. இந்தியா சார்பில் லவ்பிரீத் சிங் 28, பங்கேற்றார். முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 176 கிலோ துாக்கி, காமன்வெல்த் சாதனை படைத்தார். நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ (166) இரண்டாவது இடத்தில் இருந்தார்.

நழுவிய தங்கம்

அடுத்து நடந்த 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் முதல் வாய்ப்பில் 205 கிலோ துாக்கிய லவ்பிரீத் சிங், தங்கம் வெல்ல காத்திருந்தார். மறுபக்கம் நியூசிலாந்தின் டேவிட் ஆன்ட்ரூ, 2 வது வாய்ப்பில் 223 கிலோ துாக்கி, முதலிடத்துக்கு முன்னேறினார். முடிவில் ஆன்ட்ரூ (389) தங்கம் கைப்பற்றினார். ஒரு கிலோ பின்தங்கிய லவ்பிரீத் சிங்கிற்கு (338 கிலோ) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

சீமா 'வெண்கலம்'

பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சீமா 27, நிதி ராணி 29, பங்கேற்றனர். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 58.65 மீ., துாரம் எறிந்த சீமா, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.

ஜமைக்காவின் சமந்தா ஹால், 61.66 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்றார். கனடாவின் ஜூலியாவுக்கு (60.67) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 57.10 மீ., துாரம் மட்டும் எறிந்த இந்தியாவின் நிதி ராணி, 4வது இடம் பிடித்தார்.

கணவருக்கு சமர்ப்பணம்

ஹரியானாவின் பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர் சீமா. தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். கூடைப்பந்து, ஈட்டி எறிதல் வீரர். இதைப் பார்த்து விளையாட்டில் களமிறங்கினார். உடற்கல்வி துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான படிப்பில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் வட்டு எறிதல் வீரரான கணவர் ரவிந்தர் காளிராம்னா பயிற்சியில், வட்டு எறிதலில் ஈடுபட்டார்.

மகன் ருத்ரா பிறந்த 11 மாதத்தில் மீண்டும் பயிற்சியில் இறங்கினார். ஆனால் குழந்தை பிறப்புக்கு பின், மீண்டும் பழைய 'பார்ம்' பெற மிகவும் சிரமப்பட்டார். ஒருவழியாக படிப்பு, மகனை கவனிப்பது, பயிற்சி என அனைத்திலும் 'பேலன்ஸ்' செய்த சீமா, 2025 தேசிய விளையாட்டில் தங்கம் வென்று, மீண்டார்.

அவர் கூறுகையில்,'' இது எனது முதல் காமன்வெல்த் பதக்கம். வெண்கலமாக இருந்தாலும் மிகவும் 'ஸ்பெஷலானது'. இந்த வெற்றிக்கு பின்னால் எனது கணவரின் கடின உழைப்பு, தியாகம், ஆதரவு உள்ளது. பதக்கத்தை அவருக்கு சமர்பிக்கிறேன்,'' என்றார்.

டெய்லர் மகன்

பஞ்சாப், அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் லவ்பிரீத் சிங். இவரது தந்தை டெய்லராக, தாத்தா காய்கறி விற்பவராக உள்ளனர். 13 வயதில் பளுதுாக்குதலில் இறங்கினார் லவ்பிரீத் சிங். 2022ல் வெண்கலம் வென்ற இவர், இம்முறை வெள்ளி கைப்பற்றியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us