/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு * 2030ல் நடத்த திட்டம்
/
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு * 2030ல் நடத்த திட்டம்
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு * 2030ல் நடத்த திட்டம்
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு * 2030ல் நடத்த திட்டம்
ADDED : பிப் 21, 2025 10:39 PM

புதுடில்லி: வரும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டு நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக 2010ல் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதன் 23வது விளையாட்டு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் (2026, ஜூலை 23 - ஆக. 2) நடக்க உள்ளது. செலவை குறைக்கும் வகையில் ஹாக்கி, பாட்மின்டன், மல்யுத்தம், 'டி-20' கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், துப்பாக்கிசுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டன.
குத்துச்சண்டை, ஜூடோ, பாரா தடகளம், நீச்சல், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், நெட் பால், பளுதுாக்குதல் உட்பட 10 போட்டிகள் மட்டும் நான்கு மைதானங்களில் நடக்க உள்ளன.
இதனிடையே 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னோட்டமாக, 2030ல் காமன்வெல்த் விளையாட்டு நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. கடைசி தேதியான மார்ச் 31 க்குள் விண்ணப்பிக்க ஏற்பாடு நடக்கின்றன.
இதுகுறித்து மத்திய விளையாட்டுதுறை அமைச்சகத்தின் சார்பில் வெளியான செய்தியில்,' காமன்வெல்த் விளையாட்டு நடத்த ஆர்வமாக உள்ளோம். இதுகுறித்து அந்த அமைப்புடன் முறையான பேச்சுவார்த்தை நடக்கிறது. 2026ல் நீக்கப்பட்ட அனைத்து போட்டிகளையும் சேர்த்து, இந்தியாவில் நடத்துவதாக தெரிவித்துள்ளோம். இதனால் நமது பதக்க வாய்ப்பு பறிபோகாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

