/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கோயல் உலக சாதனை * காமன்வெல்த் பளுதுாக்குதலில்...
/
கோயல் உலக சாதனை * காமன்வெல்த் பளுதுாக்குதலில்...
ADDED : ஆக 26, 2025 11:06 PM

ஆமதாபாத்: காமன்வெல்த் பளுதுாக்குதல் யூத் பிரிவில் புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் கோயல்.
ஆமதாபாத்தில் காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 30 நாடுகளில் இருந்து 291 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். 53 கிலோ யூத் பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கோயல் பார் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 85 கிலோ எடை துாக்கினார்.
அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 107 கிலோ துாக்கினார். மொத்தம் 192 எடை துாக்கிய கோயல் தங்கம் வென்றார்.
யூத் காமன்வெல்த் பிரிவில் இது புதிய உலக சாதனை ஆனது. தவிர 53 கிலோ உலக 'சீனியர்' பிரிவில் மொத்தம் 188 கிலோ எடை தான் இதுவரை துாக்கப்பட்டுள்ளது.
58 கிலோ பிரிவில் இந்தியாவின் பிந்தியாராணி மொத்தம் 206 கிலோ (91+115) எடை துாக்கி, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஜூனியர் 58 கிலோ பிரிவில் இந்தியாவின் சாந்தா (185 கிலோ) தங்கம் கைப்பற்றினார்.
ஜூனியர் 65 கிலோ பிரிவில் இந்திய வீரர் அனிக் மோடி, 238 கிலோ (103+135) துாக்கி தங்கம் வசப்படுத்தினார். ஜூனியர் பிரிவில் (65 கிலோ) யாஷ் கந்தகலே (273) தங்கம் கைப்பற்றினார்.
ராஜமுத்துபாண்டி 'வெள்ளி'
ஆண்கள் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் ராஜமுத்துபாண்டி (தமிழகம்), 'ஸ்னாட்ச்' பிரிவில் 128 கிலோ, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 168 கிலோ என மொத்தம் 296 கிலோ துாக்கி, வெள்ளி வென்றார்.