உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 17, 2026 10:29 PM

அ நிறம் | அளவு
சிட்னி: சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் தக்சினேஸ்வர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 442வது இடத்திலுள்ள இந்தியாவின் தக்சினேஸ்வர், 198வது இடத்திலுள்ள ஆகஸ்ட் ஹோல்ம்கிரெனை எதிர்கொண்டார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை, தக்சினேஸ்வர் 6–7 என இழந்தார்.
அடுத்த செட்டில் சுதாரித்த இவர், 7–5 என வசப்படுத்தினார். மூன்றாவது, கடைசி செட்டில் தக்சினேஸ்வர் 6–4 என வென்றார். இரண்டு மணி நேரம், 21 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தக்சினேஸ்வர், 6–7, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
