தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : நவ 17, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி ‘டி–20’ தொடர் நடக்கிறது. இன்று இந்துாரில் நடக்கும் ‘பி’ பிரிவு போட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதுகின்றன.

* கத்தாரில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 11–9, 11–1, 13–11 என்ற நேர் செட் கணக்கில் எகிப்தின் ஓமரை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

* பஞ்சாப்பில் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையரில் ஸ்நேஹித், பெண்கள் ஒற்றையரில் திவ்யான்ஷி சாம்பியன் பட்டம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பிரியானுஜ், சிண்ட்ரெலா கோப்பை கைப்பற்றினர்.

* ஹாங்காங்கில் சூப்பர் 500 பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. இந்தியாவின் சாத்வித்சாய்ராஜ், சிராக் ஜோடி 15–21, 21–17, 28–26 என சீன தைபேவின் லீ, யங் ஜோடியை சாய்த்து, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

* பாரிஸ் ஒலிம்பிக், துப்பாக்கிசுடுதலில் இரண்டு வெண்கலம் வென்றவர் இந்தியாவின் மனு பாகர். இவர், சர்வதேச துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பின் தடகள கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 2030 வரை இப்பதவியில் இருப்பார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us