/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 20 பதக்கம் * 'டெப்லிம்பிக்சில்' புதிய வரலாறு
/
இந்தியாவுக்கு 20 பதக்கம் * 'டெப்லிம்பிக்சில்' புதிய வரலாறு
இந்தியாவுக்கு 20 பதக்கம் * 'டெப்லிம்பிக்சில்' புதிய வரலாறு
இந்தியாவுக்கு 20 பதக்கம் * 'டெப்லிம்பிக்சில்' புதிய வரலாறு
ADDED : நவ 25, 2025 11:15 PM

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் முதன் முறையாக இந்தியா அதிகபட்சம் 20 பதக்கம் கைப்பற்றியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காதுகேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. இதன் நிறைவு விழா இன்று நடக்கிறது.
இந்தியா சார்பில் 45 வீரர்கள், 28 வீராங்கனைகள் 11 போட்டிகளில் பங்கேற்றனர். கோல்ப் போட்டியில் இந்தியாவின் திக் ஷா தாகர், தங்கப்பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.
துப்பாக்கிசுடுதலில் இந்திய நட்சத்திரங்கள் பதக்கங்களை குவித்தனர். தனுஷ் (2 தங்கம்), அனுயா, அபினவ் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு 16 பதக்கங்கள் கிடைத்தன.
ஆண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் சுமித் தாஹியா தங்கம் கைப்பற்றினார்.
இப்போட்டியில் அமித் கிருஷ்ணன் வெள்ளி வென்றார். கராத்தேயில் லோமா ஸ்வெய்ன், வெண்கலம் வசப்படுத்தினார்.
இந்தியா 9 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது. 'டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் இந்தியா வென்ற அதிக பதக்கங்களாக இது அமைந்தது. முன்னதாக 2021ல் இந்தியா 16 பதக்கம் (8 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம்) வென்றிருந்தது.

