/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் அனுயா * 'டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில்...
/
தங்கம் வென்றார் அனுயா * 'டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் அனுயா * 'டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் அனுயா * 'டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில்...
ADDED : நவ 17, 2025 11:12 PM

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம்பிக்ஸ்') 25வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் அனுயா, பிரஞ்ஜலி பங்கேற்றனர்.
இதில் 572 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்த பிரஞ்ஜலி, டெப்லிம்பிக் தகுதிச்சுற்றில் புதிய உலக சாதனை படைத்தார். அனுயா 564 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்றார். இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட அனுயா, 241.1 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் தட்டிச் சென்றார். பிரஞ்ஜலிக்கு (236.8) வெள்ளி கிடைத்தது.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில், 2022 டெப்லிம்பிக்கில் தங்கம் வென்ற, இந்தியாவின் அபினவ் தேஷ்வல், உலக சாதனையை (576 புள்ளி) சமன் செய்து, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 235.2 புள்ளி மட்டும் எடுத்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது.

