/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய ஜோடி 'தங்கம்' * 'டெப்லிம்பிக்சில்' அபாரம்
/
இந்திய ஜோடி 'தங்கம்' * 'டெப்லிம்பிக்சில்' அபாரம்
ADDED : நவ 18, 2025 10:56 PM

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.
துப்பாக்கி சுடுதலில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இதன் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த், மஹித் சாந்து ஜோடி, தென் கொரியாவின் ஜியான் டெய்ன், கிம் ஊரிம் ஜோடியை சந்தித்தது. துவக்கத்தில் 4-0 என முன்னிலை பெற்ற இந்திய ஜோடி, முடிவில் 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
டோக்கியோ 'டெப்லிம்பிக்சில்' தனுஷ் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக இவர், தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
தவிர பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற மஹித் சாந்துவுக்கு இது முதல் தங்கம் ஆனது.
இரண்டாவது பதக்கம்
10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் முர்டசா வானியா, கோமல் மிலிந்த் ஜோடி, 16-12 என உக்ரைனின் லைகோவா, ஒலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.
இதுவரை இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது.

