/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் தீபிகா குமாரி: ஆசிய வில்வித்தையில் கலக்கல்
/
தங்கம் வென்றார் தீபிகா குமாரி: ஆசிய வில்வித்தையில் கலக்கல்
தங்கம் வென்றார் தீபிகா குமாரி: ஆசிய வில்வித்தையில் கலக்கல்
தங்கம் வென்றார் தீபிகா குமாரி: ஆசிய வில்வித்தையில் கலக்கல்
ADDED : பிப் 25, 2024 09:03 PM

பாக்தாத்: ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி இரண்டு தங்கம் வென்றார்.
ஈராக்கில் ஆசிய கோப்பை 'லெக்-1' வில்வித்தை தொடர் நடந்தது. பெண்களுக்கான 'ரீகர்வ்' ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தீபிகா குமாரி 29, சிம்ரன்ஜீத் கவுர் மோதினர். 20 மாத இடைவேளைக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பிய தீபிகா 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் மோதின. விறுவிறுப்பான போட்டி 24-24 என சமன் ஆனது. பின் 'டை பிரேக்கரில்' அசத்திய தீபிகா குமாரி, சிம்ரன்ஜீத் கவுர், பஜன் கவுர் அடங்கிய இந்திய அணி 5-4 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
ஆண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதின. தருண்தீப் ராய், பிரவின் ரமேஷ் ஜாதவ், திராஜ் அடங்கிய இந்திய அணி 56-53 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.
ஆண்களுக்கான 'ரீகர்வ்' ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திராஜ் 7-3 என சகவீரர் தருண்தீப் ராயை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
கலப்பு அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதின. சிம்ரன்ஜீத் கவுர், திராஜ் அடங்கிய இந்திய அணி 37-32 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.