தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தோனி ஓய்வு ஏன்: சொல்கிறார் ரெய்னா

தோனி ஓய்வு ஏன்: சொல்கிறார் ரெய்னா

தோனி ஓய்வு ஏன்: சொல்கிறார் ரெய்னா


ADDED : நவ 18, 2026 09:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 09:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘‘ முழங்காலில் ஏற்பட்ட பிரச்னை தான், பிரிமியர் லீக் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற காரணமாக இருந்தது,’’ என ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 45. கடந்த 2008ல் பிரிமியர் லீக் தொடர் துவங்கியது முதல், சென்னை அணி கேப்டனாக அசத்தினார். 12 சீசனில், 10ல் அணியை பைனலுக்கு கொண்டு சென்ற தோனி, 2010, 2011, 2018, 2021, 2023 என ஐந்து முறை கோப்பை வென்று தந்தார்.

கடந்த சீசனில் பெருவிரல், கெண்டைக் கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி, ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. தற்போது பிரிமியர் லீக் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இம்முறை ஆலோசகராக களமிறங்குகிறார்.

இதுகுறித்து சென்னை அணிக்காக 2008 முதல் 2021 வரை என மொத்தம் 205 போட்டிகளில் விளையாடிய ரெய்னா, 39, கூறியது:

தோனி நீண்ட காலமாக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். இது அவரது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இரண்டு முழங்காலிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து அவருக்கு சிக்கலை தந்தது.

எப்படியும் தேறி விடலாம் என்ற எண்ணத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். போட்டிகளில் ‘இம்பாக்ட்’ வீரராக களமிறங்குவதையும் அவர் விரும்பவில்லை. தொடர்ந்து விளையாட ஆசைப்பட்டாலும், தோனியின் உடல் அதைத் தாங்க முடியாத நிலைக்கு சென்று விட்டது.

சென்னை அணிக்காக, பிரிமியர் லீக் தொடருக்காக அளவற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார். கடந்த 2008 முதல் ரசிகர்கள், குழந்தைகள், தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் என அனைவரிடம் இருந்தும் தோனி பெற்றுள்ள அன்பு வியக்கத்தக்கது.

பிரிமியர் அரங்கில், வெற்றிகரமான அணியாக சென்னை நீடித்திருக்க காரணம் தோனி தான். ‘விசில் போடு ஆர்மி’ ரசிகர்கள் ஆதரவுடன், பயிற்சியாளர் பிளமிங்குடன் இணைந்து, ஒரு வீரராகவும், மனிதராகவும், சிறப்பாக செயல்பட்டார். இப்போது வரையிலும், பிரிமியர் லீக் தொடரின் அடையாளமாக திகழ்கிறார் தோனி. இவை அனைத்தையும் விட, தனி மனிதராக அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் இன்னும் சிறப்பானது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us