
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எகிப்தில் நடக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை 'வால்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் 3, 5வது இடம் பிடித்த இந்திய வீராங்கனைகளான தீபா கர்மாகர் (13.449 புள்ளி), பிரனதி நாயக் (13.166) பைனலுக்கு முன்னேறினர்.
* தென் கொரியாவில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என 'நடப்பு சாம்பியன்' சீனாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றனர்.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் அனாபெல் 210 ரன் விளாசினார். 248 பந்தில் 200 ரன்னை எட்டிய இவர், டெஸ்ட் அரங்கில் அதிவேக இரட்டை சதமடித்த வீராங்கனையானார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் கரேன் ரால்டன் 306 பந்தில் (எதிர்: இங்கிலாந்து, 2001, லீட்ஸ்) அடித்திருந்தார்.