/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் திவ்யான்ஷ்: 'உலக' துப்பாக்கி சுடுதலில்...
/
தங்கம் வென்றார் திவ்யான்ஷ்: 'உலக' துப்பாக்கி சுடுதலில்...
தங்கம் வென்றார் திவ்யான்ஷ்: 'உலக' துப்பாக்கி சுடுதலில்...
தங்கம் வென்றார் திவ்யான்ஷ்: 'உலக' துப்பாக்கி சுடுதலில்...
ADDED : ஜன 29, 2024 10:47 PM

கெய்ரோ: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றார்.
எகிப்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார், 632.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா (630.7 புள்ளி) 4வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார்.
அடுத்து நடந்த பைனலில் திவ்யான்ஷ் சிங், 253.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். அர்ஜுன் பாபுதா (166.1 புள்ளி) 6வது இடம் பிடித்தார்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் நான்சி (633.1), சோனம் உத்தம் மஸ்கர் (632.7) முறையே 4, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். பைனலில் அசத்திய சோனம், 252.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். நான்சி (209.5) 4வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி உட்பட 5 பதக்கம் வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.