/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஈட்டி எறிதல்: மானு 'தங்கம்' * தமிழகத்தின் நித்யாவுக்கு வெள்ளி
/
ஈட்டி எறிதல்: மானு 'தங்கம்' * தமிழகத்தின் நித்யாவுக்கு வெள்ளி
ஈட்டி எறிதல்: மானு 'தங்கம்' * தமிழகத்தின் நித்யாவுக்கு வெள்ளி
ஈட்டி எறிதல்: மானு 'தங்கம்' * தமிழகத்தின் நித்யாவுக்கு வெள்ளி
ADDED : ஜூன் 01, 2024 11:20 PM

தைபே: தைவான் ஓபன் ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் மானு, தங்கம் வென்றார்.
தைவானில் சர்வதேச ஓபன் உலக தடகள கான்டினென்டல் போட்டி நடந்தது. இதன் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் மானு 24, களமிறங்கினார். சமீபத்தில் புவனேஸ்வரில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் மானு, 82.06 மீ., துாரம் எறிந்து, நீரஜ் சோப்ராவுக்கு அடுத்த இடம் பிடித்து இருந்தார்.
இதனால் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய மானு, முதல் வாய்ப்பில், 78.32 மீ., துாரம் மட்டும் எறிந்தார். அடுத்து 76.80 மீ., துாரம் எறிந்த இவர், மூன்றாவது வாய்ப்பில் 80.59 மீ., துாரம் எறிந்தார்.
நான்காவது வாய்ப்பில் 'பவுல்' ஆன மானு, அடுத்து 81.52 மீ., துாரம் எறிந்தார். கடைசி, ஆறாவது வாய்ப்பில் 81.58 மீ., துாரம் எறிந்து முதலிடம் பெற, தங்கப்பதக்கம் கிடைத்தது.
சீன தைபேவின் டிசன் செங் (76.21 மீ.,), சாவோ ஹாங் (71.24 மீ.,) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தகுதியை (85.50 மீ.,) விட இது குறைவு என்பதால், மானு ஒலிம்பிக் செல்ல முடியாது. இந்தியா சார்பில் இதுவரை நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா என இருவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
நித்யா வெள்ளி
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை நித்யா, 13.23 வினாடி நேரத்தில் ஓடி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி கைப்பற்றினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் விஸ்மாயா, 53.49 வினாடியில் வந்து வெண்கலப்பதக்கம் வசப்படுத்தினார்.