/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டுப்ளான்டிஸ் சாதனை * உலக உள்ளரங்கு தடகளத்தில்...
/
டுப்ளான்டிஸ் சாதனை * உலக உள்ளரங்கு தடகளத்தில்...
ADDED : மார் 01, 2025 10:49 PM

புதுடில்லி: போல் வால்ட் போட்டியில் 11வது முறையாக உலக சாதனை படைத்தார் டுப்ளான்டிஸ்.
பிரான்சில் உலக தடகள உள்ளரங்கு போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் உலக சாம்பியன், சுவீடனின் டுப்ளான்டிஸ் களமிறங்கினார்.
இவர் 6.27 மீ., உயரம் தாவி புதிய உலக சாதனை படைத்தார். கிரீசின் கராலிஸ் (6.07 மீ.,), ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் (5.91 மீ.,) அடுத்த இரு இடம் பிடித்தனர். தவிர, போட்டியில் பங்கேற்ற 9 பேரில் 6 வீரர்கள், குறைந்தபட்சம் 5.91 மீ., உயரம் தாவிய நிகழ்வு, முதன் முறையாக நடந்தது.
11 வது முறை
போல் வால்ட் போட்டியில் டுப்ளான்டிஸ் சாதனை தகர்த்தது, 11வது முறையாக நடந்தது. முன்னதாக இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 6.25 மீ.,, அடுத்து போலந்தில் நடந்த போட்டியில் 6.26 மீ., உயரம் தாவி இருந்தார்.