தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எர்லிங் ஹாலந்து 'ஹாட்ரிக்'

எர்லிங் ஹாலந்து 'ஹாட்ரிக்'

எர்லிங் ஹாலந்து 'ஹாட்ரிக்'


ADDED : ஏப் 05, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த எப்.ஏ. கோப்பை கால்பந்து 145வது சீசனுக்கான காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் மோதின. இதில் எர்லிங் ஹாலந்து 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புல்ஹாமில் நடந்த காலிறுதியில் செல்சி அணி 7-0 என, போர்ட் வேல் அணியை வென்றது. சவுத்தாம்ப்டன் அணி 2-1 என ஆர்சனல் அணியை தோற்கடித்தது.

பைனலில் பெகுலா

சார்லஸ்டன்: அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இவா ஜோவிச் மோதினர். இதில் ஜெசிகா 6-4, 5-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் யூலியாவிடம் தோல்வியடைந்தார்.

பார்சிலோனா முதலிடம்

மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-2 என, மல்லோர்கா அணியிடம் தோல்வியடைந்தது. புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா (76 புள்ளி), ரியல் மாட்ரிட் (69) முதலிரண்டு இடங்களில் உள்ளன. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ள நிலையில், கூடுதலாக 7 புள்ளி பெற்றுள்ள பார்சிலோனா அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஸ்போர்டிங் கிளப் டில்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

* ராஞ்சியில் நடக்கும் சப்-ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசனுக்கான லீக் போட்டியில் உத்தரகாண்ட் அணி 9-2 என, குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பெங்கால் அணி 2-3 என, அசாமிடம் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி 2-0 என, ஆந்திராவை வென்றது.

* ஸ்பெயினின் கிரானடாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் விஜய்வீர் சித்து, மெகுலி கோஷ், அஞ்சும், ரிதம் சங்வான், தனுஷ் ஸ்ரீகாந்த், அர்ஷ்தீப் சிங், முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* ஜப்பானில் நடந்த சர்வதேச கோல்ப் தொடரில் இந்திய வீரர் கரன்தீப் கோச்சர், தலா 272 புள்ளிகளுடன் 5வது இடத்தை தென் கொரியாவின் ஹாங்டேக் கிம் உடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஸ்மித் (269) சாம்பியன் பட்டம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us