UPDATED : அக் 10, 2026 11:18 PM
ADDED : அக் 10, 2026 09:46 PM
* பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது), 2027, மார்ச் 31, ஏப்ரல் 17 வரை சீனாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இன்று இந்தியா–மலேசிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 6 புள்ளியுடன் உள்ளன. இன்று வெல்லும் அணி, 9 புள்ளியுடன் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னேறலாம்.
* ருவாண்டாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தேவ் ஜாவியா, 6–3, 7–6 என பிரான்சின் டெனோலியை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
* எகிப்தின் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. 10 மீ., ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் முஸ்கான், உதய்வீர் சித்து ஜோடி 571 புள்ளியுடன் 14வது இடம் பெற்று ஏமாற்றியது.
* டில்லியில் நடந்த தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையரில் வைதேகி சவுத்ரி (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். ஆண்கள் இரட்டையரில் மணிஷ் சுரேஷ்குமார், நிதின் சின்ஹா, பெண்கள் இரட்டையரில் லட்சுமி, சம்ஹிதா ஜோடி சாம்பியன் ஆனது.
