UPDATED : அக் 10, 2026 11:18 PM
ADDED : அக் 10, 2026 09:46 PM
பைனலில் ஆன்ட்ரீவா–கின்வென்
பீஜிங்: சீனாவின் பீஜிங் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–5’ வீராங்கனை, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, செக் குடியரசின் நிக்கோலாவை (34 வது இடம்) சந்தித்தார். இதில் மிர்ரா 6–2, 6–2 என எளிதாக வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங், பெல்ஜியத்தின் மெர்டென்ஸ் மோதினர். இதில் கின்வென் 7–5, 6–2 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். இன்று நடக்கும் பைனலில் ஆன்ட்ரீவா–கின்வென் மோத உள்ளனர்.
டார்ட்மண்ட்–பிரீமென் ‘டிரா’
டார்ட்மண்ட்: ஜெர்மனியில் கிளப் அணிகளுக்கு இடையிலான பண்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. டார்ட்மண்டில் நடந்த லீக் போட்டியில் போருசியா டார்ட்மண்ட், வெர்டர் பிரீமென் அணிகள் மோதின. இப்போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. டார்ட்மண்ட் அணி சார்பில் ஸ்வென்சன் (80), ஸ்லாட்டர்பெர்க் (85) தலா ஒரு கோல் அடித்தனர். பிரீமென் அணிக்கு ரெய்ஸ் (88), புல்கிரக் (90+2) கோல் அடித்து கைகொடுத்தனர்.
