தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எகிப்தில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் ஜக் ஷேர் சிங் கங்குரா 6–15, 17–15, 15–12 என சீனதைபேயின் யுவான்–ஷுவே ஜுவாங்கை வீழ்த்தினார். பஞ்சாப்பை சேர்ந்த கங்குரா, பதக்கத்தை உறுதி செய்தார்.

* இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், துபாயில் சொகுசு வீடு வாங்கினார். புதிய வீட்டில் தனது மனைவி தேவிஷாவுடன் இருக்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யகுமார். இவரது வீட்டில் அருகே, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீடு உள்ளது.

* சீனியர் பெண்கள் ‘டி–20’ கிரிக்கெட் 18வது சீசனுக்கான (அக். 26 – நவ. 20) டில்லி அணியின் கேப்டனாக சோனி யாதவ், துணை கேப்டனாக ஷ்வேதா ஷெராவத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* கபடி சாம்பியன்ஸ் லீக் 2வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நாளை டில்லியில் நடக்கவுள்ளது. இதற்காக 5 அணிகள் சார்பில், தேவங்க் தலால், சவுரவ் சஞ்சய் (பிவானி), அஷு மாலிக் (ஹிசார்), விஷால் நார்வல் (பானிபட்), அக் ஷித் துல் (கர்னல்), மன்தீப் குமார் (குருகிராம்) உள்ளிட்ட 10 வீரர்கள், தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

* உ.பி.,யின் ஜான்சியில் சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தெலங்கானா அணி 3–2 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us