சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் மெஸ்ஸியை முந்தினார் எம்பாப்வே
சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் மெஸ்ஸியை முந்தினார் எம்பாப்வே
UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 06:54 PM

ரோம்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் 100 போட்டிகளில் விளையாடிய இளம் வீரர் என சாதனை படைத்தார் எம்பாப்வே.
இத்தாலியின் ரோம் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரோமா (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. கடைசி நிமிடத்தில் (90வது) ஆன்டோனியோ ரூடிகர் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 4–3 என ‘திரில்’ வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் சார்பில் ஒரு கோல் அடித்த பிரான்சின் எம்பாப்வே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய இளம் வீரர்கள் (27 வயது) வரிசையில் மெஸ்ஸியை முந்தி முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2015ல் ரோமா அணிக்கு எதிராக விளையாடிய பார்சிலோனா அணியின் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, தனது 28வது வயதில் 100வது போட்டியில் விளையாடினார்.
கடந்த 2016ல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மொனாகோ அணியில் அறிமுகமான எம்பாப்வே, இதுவரை 72 போட்டியில், 100 கோல் அடித்துள்ளார். இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார் எம்பாப்வே. முதல் மூன்று இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (140 கோல்), மெஸ்ஸி (129), லெவான்டோவ்ஸ்கி (109), கரீம் பென்சிமா (90) உள்ளனர்.
