ADDED : அக் 21, 2026 12:05 AM

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்கள் ‘டி–20’ தரவரிசை பட்டியல் வெளியானது. சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நந்தினி, 26 இடம் முன்னேறி, 45 வது இடம் பிடித்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி, 43 வது இடத்துக்கு முன்னேறினார்.
* ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர், 9 வது சீசன், வரும் 27 முதல் நவ. 5 வரை பஞ்சாப்பில் நடக்க உள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் காண, ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* போர்ச்சுகலின் லிஸ்பனில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், 6–4, 6–2 என ஸ்பெயினின் சான்செசை வீழ்த்தினார்.
* மும்பையில் நடக்கும் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், கரண் சிங், பிரபோத் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
* ஏ.எப்.சி., சாலஞ்ச் கால்பந்து தொடரில் இந்தியாவின் கோவா அணி, 2–1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தின் போர்டிஸ் அணியை வென்றது. கோவா அணிக்கு ஓர்டிஸ், சிக்கி தலா ஒரு கோல் அடித்து உதவினர்.
