தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் அசத்தல்

ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் அசத்தல்

ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் அசத்தல்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசுன்சியான்: உலக ஸ்கேட்டிங் விளையாட்டு மாரத்தான் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார் இந்தியாவின் ஆனந்த்குமார்.

பராகுவேயில் உலக ஸ்கேட் விளையாட்டு நடந்தது. 42 கி.மீ., மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆனந்த்குமார் வேல்குமார் 23, முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் தட்டிச் சென்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

தவிர இத்தொடரில் ஆனந்த்குமார் வென்ற மூன்றாவது பதக்கம் இது. இதற்கு முன், வெள்ளி (1500 மீ.,), வெண்கலம் (500 மீ.,) வென்றிருந்தார்).

ஒட்டுமொத்தமாக உலக ஸ்கேட்டிங்கில் இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us