UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 05:14 PM

ரியல் மாட்ரிட் அபாரம்
மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், செவில்லா அணிகள் மோதின. இதில் எம்பாப்வே 2 கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், 7 வெற்றி, 2 தோல்வி என 21 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் பார்சிலோனா (27 புள்ளி), அத்லெடிகோ மாட்ரிட் (22) அணிகள் உள்ளன.
ஆர்சனல் அணி அசத்தல்
நாட்டிங்காம்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. நாட்டிங்காமில் நடந்த லீக் போட்டியில் ஆர்சனல், நாட்டிங்காம் பாரெஸ்ட் அணிகள் மோதின. இதில் ஆர்சனல் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீட்ஸ் யுனைடெட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியன் அணி 5–0 என கிறிஸ்டல் பேலஸ் அணியை தோற்கடித்தது.
ஸ்பெயின் வீரர் முன்னேற்றம்
பார்சிலோனா: டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ஏ.டி.பி., தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா, 26வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஒற்றையரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இத்தொடரின் பைனல் வரை சென்ற மற்றொரு ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடார் 13வது இடத்தில் இருந்து 11வது இடத்தை கைப்பற்றினார்.
